இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையில் பனிப்போர் ஒன்று இடம் பெற்று வருகின்றது.
இந்தப் போரில் ஈரானின் முன்னேற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தமக்கிருக்கும் அனைத்து அதிகாரங்களையும் அமெரிக்கா பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் ஈரானைக் குறித்த அச்சத்தை அமெரிக்காவிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானைக் குறித்து இஸ்ரேல் தெரிவித்துள்ளதாவது, ‘ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்குவது என்பது மிகவும் ஆபத்தானது.
ஈரானுக்கு அணு ஆயுத வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்யும் பட்சத்தில் அவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பாரிய ஆபத்தாக இருக்கும். எனவே ஈரானின் மேல் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ‘ஜோ பைடன்’ “ஈரானைக் குறித்து அச்சப்பட வேண்டாம், ஈரான் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதியின்றி அணு ஆயுதத்தை வைத்திருக்கவோ அல்லது தயாரிக்கவோ முடியாது என்றும் தற்போதுள்ள பொருளாதார தடையினை அணு ஆயுத தடையாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாகவும் அதிபர் ‘ஜோ பைடன்’ இஸ்ரேலிய பிரதமர் ‘யாயர் லாபிடிடம்’ தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரான் அணு சக்திக்குரிய மூலப்பொருளான யுரேனியத்தை சுமார் மூன்று இடங்களில் கண்டு பிடித்திருப்பதாகவும், யுரேனியம் தொடர்பான தேடல்களில் தற்போது ஈரான் முழுமையான ஈடுபாட்டை செலுத்தி வருவதாகவும் ஈரானிய செய்திகளை மையப்படுத்தி சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.