Friday, January 24, 2025
HomeLatest Newsடெங்கு பரவல் தீவிரம்; ஆபத்தான 74 இடங்கள்!

டெங்கு பரவல் தீவிரம்; ஆபத்தான 74 இடங்கள்!

டெங்கு அபாயம் உள்ள பிரதேசங்களாக 74 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவற்றுள் சீதுவ, குண்டசாலை, வத்தேகம, குளியாப்பிட்டிய, வாரியபொல, பதுளை, பசறை, வெலிமடை, பெல்மடுல்ல மற்றும் கலிகமுவ ஆகியவை அடங்குவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சுற்றாடலை சுத்தமாக பேணுவதன் மூலம் டெங்கை கட்டுப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Recent News