தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 இலட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்.எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதேவேளை ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.