நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வரகின்றது.
இதேவேளை மின்வெட்டு காரணமாக பல்வேறு துறைகளும் கடும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அனல் மற்றும் நீர் மின் உற்பத்தியை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பணிப்புரை விடுத்துள்ளது.
தற்போதைய தினசரி மின்வெட்டை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் அதிகரிக்காமல் பராமரிக்க PUCSL அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
மே மாதம் 3ஆம் திகதி செவ்வாய்கிழமை, நொரோச்சோலை அனல்மின் நிலையத்தில் 270 மெகாவாட் மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்தது.
ஜெனரேட்டரை திருத்துவதற்கு மேலும் ஐந்து நாட்கள் ஆகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.