Thursday, December 26, 2024
HomeLatest Newsஅனைவரும் ஒன்றிணைந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் என கோரிக்கை!

அனைவரும் ஒன்றிணைந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் என கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும் என மார்ச் 12 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான குழுவொன்றும் இதன் ஊடாக நியமிக்கப்பட வேண்டும் என அந்த இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுபவர்கள் தமது வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் எனவும் மார்ச் 12 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு முன்வைக்கப்படும் திட்டங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே இடைக்கால அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்கான தமது கடமையை ஆற்ற வேண்டும் எனவும் மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

Recent News