கடந்த பெப்ரவரி மாதமளவில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன.
இ்ந் நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்ஸிகோவை அந் நாட்டு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். அவருக்கு பதிலாக புதிய மந்தீரியாக உமெரோவை நியமிக்குமாறும் பணித்துள்ளார்.
இது குறித்து காணொலிமூலம் செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி இதனை நடைமுறைப்படுத்த இந்த வாரம் நாடாளுமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த 550 நாட்களுக்கு மேலாக போரை முன்னின்று நடாத்தினார் என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 ம் ஆண்டு நவம்பரிலிருந்தே உக்ரைன் பாதுகாப்பு மந்திரியாக ரெஸ்னிகோல் செயற்பட்டு வருவதுடன் ரஷ்யாவிற்கு எதிரான போரின் போது மேற்கத்தேய இராணுவ உதவியைப் பெற முன்னோடியாகவிருந்தார்.
இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் போர் காலப்பகுதியில் ஊழல் முறைகேடுகளு்கு எவ்வித இடமுமில்லை என உக்ரேன் ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந் நிலையி் குறித்த பதவி விலக்கலானது அரசியல் வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.