ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் கடந்த 31ஆம் திகதி வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின் செயற்பாடுகளைக் காட்டும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் ஆடை ஏற்றுமதி வருமானம் 496.4 மில்லியன் டொலர்களாக இருந்த நிலையில் இவ்வாண்டு பெப்ரவரியில் அது 431.3 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை ஏற்றுமதியில் 1012.5 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் அந்த நிலைமை 15.5 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.