Monday, January 20, 2025
HomeLatest Newsவிதை நெல்லை களஞ்சியப்படுத்த தீர்மானம்!

விதை நெல்லை களஞ்சியப்படுத்த தீர்மானம்!

பெரும்போகத்திற்கு தேவைப்படும் விதை நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடந்தமுறை பெரும்போகத்திலும் இம்முறை சிறுபோகத்திலும் ஏற்பட்ட இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த சில்வா தெரிவித்தார்.

அதற்கமைவாக, இரண்டரை இலட்சம் பூசல் விதை நெல் பாதுகாக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் பெரும்போகத்தில் 08 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதற்காக 40 இலட்சம் பூசல் விதை நெல் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 85 வீதமான பங்கு, விவசாயிகளால் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் எஞ்சிய விதை மற்றும் நெல்லை விவசாய அபிவிருத்தி மத்திய நிலைய மட்டத்தில் களஞ்சியப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கமைய, விதை நெல் தரப்படுத்தலுக்கான பிரிவின் கண்காணிப்பின் கீழ், விதை நெல்லை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

ஒரு கிலோ கிராம் விதை நெல்லுக்கான விலையை 150 ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த சில்வா தெரிவித்தார்.

Recent News