ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காது தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற குழுக்கள் முறைமையினை பலப்படுத்துவதற்கு இதன்போது முன்மொழியப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.