Monday, January 27, 2025
HomeLatest Newsஇலங்கையில் பொழியும் கடன் மழை: மேலும் 07 பில்லியன் டொலர் கிடைக்கின்றது!

இலங்கையில் பொழியும் கடன் மழை: மேலும் 07 பில்லியன் டொலர் கிடைக்கின்றது!

மேலும் இரு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கைக்கு 07 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தே இந்த கடன் தொகை கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால்  இலங்கைக்கான நீண்ட கால கடன் வசதிக்கு அனுமதி கிடைத்தன் பின்னர் மீண்டும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டரீதியாக விற்பனை செய்யப்படும் மதுபான வகைகள் மற்றும் சிகரெட் விற்பனை 30 முதல் 40 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

Recent News