Thursday, January 23, 2025
HomeLatest Newsஅமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல்!

அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல்!

அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டில் பதவியேற்ற ஜோ பைடனுக்கு கடந்த சில நாட்களாக கொலை மிரட்டல் விடுத்து சில கடிதங்கள் வந்துள்ளது.

அந்தக் கடிதங்களில் ஒரு விதமான வெள்ளை தூள் படிந்து இருந்ததால் பரபரப்பு எழுந்தது.

ஜோ பைடன் உன்னை வெறுக்கிறேன். உன்னையும் உன் குடும்பத்தாரையும் வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரையும் கொல்லப் போகிறேன், நான் ஒரு சைக்கோ கில்லர், நான் வெள்ளை மாளிகையைத் தகர்த்து அதில் உள்ள அனைவரையும் கொல்லப் போகிறேன்,நான் கேலி செய்யவில்லை! என்னைப் பூட்டி விடுங்கள் அல்லது நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள், இந்த ஆந்த்ராக்ஸ் உங்களுக்கானது ‘ என்று எழுதி வெள்ளை பொடி ஒன்றை அந்த கடிதத்தில் தூவி குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜார்ஜியாவை சேர்ந்த ட்ராவிஸ் பால் என்பவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் ஜோ பைடன் மட்டுமல்லாமல் மேலும் பல அரசாங்க அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பலருக்கும் இதுபோன்ற மிரட்டல் கடிதங்களை அனுப்பியது தெரிய வந்துள்ளது.

நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேகோனில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் அவருக்கு 7,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 33 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பால் ஆந்த்ராக்ஸ் தூவிய கடித அச்சுறுத்தல்களை விடுத்தது இது முதல் முறையல்ல.

அவர் இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் ஜார்ஜியின் ஸ்டேட் பார் மற்றும் அட்லாண்டாவில் உள்ள செய்தித்தாள்களுக்கு ‘உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன்.

கூடவே ஆந்த்ராக்ஸ் உங்களுக்கு ஆந்த்ராக்ஸ் அனுப்பியுள்ளேன் ‘ என்று மிரட்டல் கடிதங்களை அனுப்பி தண்டனையும் பெற்றுள்ளார் என்று, கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Recent News