Tuesday, December 24, 2024
HomeLatest Newsபிரித்தானிய மகாராணி மரணம் – இலங்கையில் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்

பிரித்தானிய மகாராணி மரணம் – இலங்கையில் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்

பொதுநலவாய நாடுகளின் தலைவரான, மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தேசிய துக்க காலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் 96 வயதில் உடல்நலக்குறைவால் நள்ளிரவு காலமானார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Recent News