Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld News20 நிமிடங்களில் மனித உயிரை கொல்லும் கொடிய உயிரினம்!!!

20 நிமிடங்களில் மனித உயிரை கொல்லும் கொடிய உயிரினம்!!!

மனிதரின் உயிரை 20 நிமிடங்களில் கொல்லும் சிறிய அளவிலான ஆக்டோபஸின் (Octopus) காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நாம் பார்க்க கூடிய 26 சிறிய கடல் வாழ் உயிரினங்கள் நபர்களை கொல்லக்கூடிய கொடிய விஷத்தை தன்னிடத்தில் கொண்டுள்ளது.இந்நிலையில், நீல வளையம் கொண்ட கொடிய விஷம் நிறைந்த ஆக்டோபஸ் 20 நிமிடங்களில் உயிரை கொல்ல கூடிய தன்மையை கொண்டுள்ளது.

இந்த நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ் தன்னுடைய பாதுகாப்பிற்கு விஷத்தை பயன்படுத்தும் என்றாலும் நண்டுகள், இறால்கள் போன்ற சிறிய இரையை பிடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறது என்று அண்மையில் காணொளி வெளியானது.அதாவது, நீல வளைய ஆக்டோபஸின் உமிழ்நீர் சுரப்பியில் உள்ள சிம்பியோடிக் பாக்டீரியா (Bacteria) டெட்ரோடோடாக்ஸின் (TTX) என்ற நச்சை உற்பத்தி செய்கிறது.இந்த டெட்ரோடோடாக்ஸின் என்ற நச்சானது மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதித்து நரம்பு தூண்டுதலை பாதிக்கிறது. இதனால், தசை சுருங்காமல் மரணத்தை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News