Tuesday, December 24, 2024
HomeLatest Newsகிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்....!

கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்….!

அவுஸ்ரேலியா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அடுத்த ஆண்டு முற்பகுதியில் தனது சொந்த ஊரான சிட்னியில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார்.

இதுவரை 103 டெஸ்ட் போ்டிகளில் விளையாடி 25 சதம் உட்பட 8,158 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

தற்போது 36 வயதான வோர்னர் கடைசி 4 இன்னிங்ஸில் 10 , 1 , 10 , 15 ரன் வீதம் எடுத்து சொதப்பியுள்ள நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் ஜொலித்தால் மட்டுமே தொடர்ந்தும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கெள்ள முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தான் எப்போதும் சொல்லி வந்ததைப் போல் 2024 ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியே இறுதிச் சர்வதேசப் போட்டியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் , ஆஷஸ் , 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்காக தன்னைத் தயார்ப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு போட்டியில் விளையாடும் போதும் இது தான் தனது இறுதிப் போட்டி என நினைத்து ஆடுவதாகவும், இதுவே தனது ஸ்டைல் எனவும் தெரிவித்துள்ளார்.

Recent News