Monday, January 27, 2025
HomeLatest Newsகணவர் இல்லாமல் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

கணவர் இல்லாமல் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, கணவர் இறப்புக்கு பின்னர் மகள் நைனிகாவின் முதல் பிறந்தநாளை மிக உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

கண்ணழகி என அனைவராலும் கொண்டாடப்பட்டவர் நடிகை மீனா, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு புகழ்பெற்று விளங்கினார்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இவரது ஒரே மகள் நைனிகா 4 வயதில் தெறி படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார், சந்தோஷமாக சென்ற இவரது வாழ்வில் எதிர்பாராதவிதமாக துயரமான சம்பவம் நடந்தது.

மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் 2022 ஜூன் 28ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

புறா எச்சத்தில் இருந்து அவருக்கு தொற்று பரவியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த துயரத்தில் இருந்து மீண்டுள்ள நடிகை மீனா நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

எப்போதுமே தன் செல்ல மகளின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடுவார் நடிகை மீனா.

தற்போது கணவர் இல்லாமல் முதன்முறையாக மகளுக்கு மிக கோலாகலமாக கப்பலில் கொண்டாடியுள்ளார்.

நைனிகா 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தார், இன்று நைனிகாவுக்கு பிறந்தநாள் என்பதால் கப்பலில் மகளின் சூப்பரான வீடியோவை வெளியிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Recent News