உலகம் முழுவதும் நுளம்புகளால் பரவும் நோய்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்தியில் இந்த ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவிவெப்பம் காரணமாகக் கொசுக்கள் பல புதிய இடங்களுக்குப் பரவத் தொடங்கி டெங்கு, சிக்குன் குனியா, ஸிக்கா முதலிய கிருமிகளைப் பரப்புகின்றன.
தென்னமெரிக்கா, வட ஐரோப்பா ஆகியவற்றைக் கடந்து அந்த நோய்கள் மிக மோசமாகப் பரவுவதை நிறுவனம் சுட்டியது.
எனவே நுளம்புகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று நிறுவனம் வலியுறுத்தியது.
உலகில் சுமார் 129 நாடுகளில் டெங்கி பரவியுள்ளது. அதில் 100 நாடுகளில் டெங்கு நிரந்தர நோயாக இருக்கின்றது.
நுளம்பு கடியால் டெங்கு ஏற்படுகிறது. காய்ச்சல், உடல் வலி ஆகியவை அதன் சாதாரணமான அறிகுறிகள்.
ஆனால் அந்த நோயினால் ஏற்படும் விளைவு சிலருக்குப் பல ஆண்டுகள் நீடித்து வாழ்நாள் முழுக்கச் செயலிக்கச் செய்யும் ஆபத்து கொண்டது. சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும் என்றும் நிறுவனம் எச்சரித்தது.