Tuesday, December 24, 2024
HomeLatest Newsகனடாவில் பிறக்கும் குழந்தைகளிற்கு ஆபத்து..!மருத்துவர்கள் எச்சரிக்கை..!

கனடாவில் பிறக்கும் குழந்தைகளிற்கு ஆபத்து..!மருத்துவர்கள் எச்சரிக்கை..!

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் பிறக்கும் குழந்தைகளிற்கு பால்வினை நோய்த் தாக்கம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு லட்சம் பேரில் 30.8 சிசுக்களுக்கு இந்த பால்வினை நோய்த் தொற்று காணப்பட்டதாகவும், தற்பொழுது ஒரு லட்சம் பேரில் 169.1 பேருக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பால்வினை நோய்களில் ஒன்றாக காணப்படும் சிபிலீசு நோயினால் அல்பர்ட்டா மாகாண சிசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், பிறக்கும் போதே சிசுக்களிற்கு பால்வினை நோய்த் தொற்று பரவியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனால், இந்த சிபிலிசு நோய்த் தொற்று கருவிலிருக்கும் சிசுக்களினது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், கர்ப்பகாலத்தின் முதல் பாதி பகுதியில் இந்த நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டால் சிசுக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆயினும், இவ்வாறு இந்த நோய்த் தொற்று அதிகளவில் பரவுவதற்கான காரணங்கள் எதுவும் இது வரையிலும் கண்டு பிடிக்கப்படவில்லை.

எனினும், பால்வினை நோய்கள் பற்றிய தெளிவின்மை, டேடிங் செயலிகள் மற்றும் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்யாமை போன்ற காரணிகளால் இந்த நோய் சிசுக்களுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News