Tuesday, April 22, 2025
HomeLatest Newsபெரு நாட்டில் அபாயம்..!விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு நிற எச்சரிக்கை..!

பெரு நாட்டில் அபாயம்..!விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு நிற எச்சரிக்கை..!

பெரு நாட்டில், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,.

அந்த வகையில், அந்த நாட்டிலுள்ள உபினாஸ் எரிமலை மிகுந்த சீற்றத்துடன் காணப்படுவதாலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிமலையானது, மொகீகுவா பகுதியில் அமைந்துள்ளதுடன் கடந்த ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து
சாம்பல் புகை மற்றும் வாயுவை வெளியேற்றி வருகின்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக எரிமலையின் சீற்றம் மிகவும் அதிகரித்துள்ளதால் அந்நாட்டின் புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன், முன்னெச்சரிக்கை செயற்பாடாக எரிமலையை சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News