Saturday, January 25, 2025
HomeLatest Newsவங்காள விரிகுடாவில் தீவிரமடைந்துள்ள மோக்கா சூறாவளி - கடலோரப்பகுதிகளுக்கான எச்சரிக்கை நீடிப்பு!

வங்காள விரிகுடாவில் தீவிரமடைந்துள்ள மோக்கா சூறாவளி – கடலோரப்பகுதிகளுக்கான எச்சரிக்கை நீடிப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மோக்கா’ புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் 2023-ம் ஆண்டு வீசிய முதல் புயல் மோக்கா வங்காளதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளுக்கு 14 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நுழையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மணிக்கு 150 – 175 கிமீ வேகத்தில் வீசும் எனவும், வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் கடல் அலைகள் 5 முதல் 6 அடி உயரம் வரை எழும்பக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளியின் தாக்கம் காரணமாக நாட்டிம் பல பகுதிகளில் தற்போது கடும் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News