Saturday, January 25, 2025
HomeLatest Newsசாக்லேட்டுகளை குறைத்து பூச்சிகளை உண்ணுங்கள் - முக்கிய நாட்டில் அதிரடி..!

சாக்லேட்டுகளை குறைத்து பூச்சிகளை உண்ணுங்கள் – முக்கிய நாட்டில் அதிரடி..!

சுவிஸ் அரசு, பிள்ளைகளை சாக்லேட்டைக், சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக பூச்சிகளை சாப்பிடச் சொல்வதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வருங்காலத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் சில நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்பார்க்கபடும் நிலையே இந்த தகவலும் கசிந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு, மே மாதம், ஜேர்மனியும், ஐக்கிய நாடுகளும், உலகம் முழுவதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து பெரிய எச்சரிக்கை விடுத்த போதிலும் அதை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை.

ஆனால், 2022 ஆகாஸ் மாதமளவில் பணக்கார நாடுகளிலேயே மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க பயன்படுத்த கூடியதாகவுள்ள திகதி தாண்டிய உணவை முகந்து பார்த்து, அவை நன்றாக இருந்தால் பயன்படுத்துவதே சிறந்த வழி என தீர்மானிக்கும் நிலை உருவாகியிருந்தது.

இந்நிலையிலே, உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக சுவிட்சர்லாந்தில், அரசியல்வாதிகள் பிள்ளைகளிற்கு பூச்சிகளை உண்ணப்பழக்குகிறார்கள். ஏனெனில், எதிர்காலத்தில் அவை மட்டுமே கிடைக்கும் முக்கிய உணவாக மாறிவிடும் என கருதுகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் உண்ணக்கூடிய பூச்சிகளுக்கான உலகளாவிய சந்தை 2023 ஆம் ஆண்டுக்குள் $1.18 பில்லியனாக உயரும்” என்றும் ஆராய்ச்சி ஒன்றில் கணித்துள்ளது.

Recent News