Friday, November 15, 2024
HomeLatest NewsWorld Newsபாகிஸ்தானில் பரவும் கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் !

பாகிஸ்தானில் பரவும் கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் !

பாகிஸ்தானின் பெஷாவரில் ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் கிரிமியன் காங்கோ
ரத்தக்கசிவு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.அடுத்த மாதம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில், இந்த காய்ச்சல் பரவுவது அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கைபர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் “காங்கோ காய்ச்சல்” இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து விலங்கு சந்தைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளுக்கு கீழ்படியாத விலங்கு சந்தைகளை மூடுமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்த கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்பது புன்யாவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த பரவும் நோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.உண்ணி கடித்தால் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் இரத்தம் அல்லது திசுக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட உடனேயே மக்களுக்கு பரவுகிறது. விவசாயத் தொழிலாளர்கள், இறைச்சி கூடத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் போன்ற கால்நடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களில் பெரும்பாலான இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்ணி கடித்து இந்த தொற்று இருப்பதை உறுதி செய்வது, ஒன்று முதல் மூன்று நாட்கள், அதிகபட்சம் ஒன்பது நாட்கள் ஆகும். பாதிக்கப்பட்ட இரத்தம் அல்லது திசுக்களுடன் தொடர்பைத் தொடர்ந்து அடைகாக்கும் காலம் பொதுவாக ஐந்து முதல் ஆறு நாட்கள் ஆகும், உறுதிப்படுத்த அதிகபட்சம் 13 நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது .

Recent News