Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல்!!!

கனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல்!!!

கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.இந்த செயல் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான கனடா துணை தூதுவரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு, கனடா மீண்டும் இடமளித்துள்ளதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுகிறது.காலிஸ்தான் ஆதரவு முழுக்கங்களை எழுப்பியது இந்தியா-கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News