Thursday, November 14, 2024
HomeLatest Newsகுதிகாலில் வெடிப்பு ஏற்படுகிறதா? இனி கவலை வேண்டாம் இதை மட்டும் செய்யுங்க

குதிகாலில் வெடிப்பு ஏற்படுகிறதா? இனி கவலை வேண்டாம் இதை மட்டும் செய்யுங்க

குதிகால் வெடித்து உங்களின் பாதங்களின் தோற்றத்தினை அசிங்கப்படுத்தி காட்டுகின்றதா?

அவற்றை உடனடியாக குணப்படுத்த வேண்டியது அவசியம் அல்லவா ,எனவே குதிகால் வெடிப்பை வீட்டிலேயே குணப்படுத்தும் சில மருத்துவ குணமுடைய பொருட்கள் குறித்து பார்க்கலாம்.

தேன்

தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் சேர்த்து, அந்த நீரில் உங்கள் கால்களை நனைக்கவும். பிறகு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்து இறந்த சருமத்தை மெதுவாக அகற்றவும்.

வாரத்தில் 3 முறை சரி செய்யுங்கள். நல்ல பலனை பெறலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும் சிறந்த பொருட்களில் ஒன்றாகும். காலினை ஊறவைத்த பின்னர் தேங்காய் எண்ணெயைத் தடவுவது நல்ல பலன்களை அளிக்கும்.

மஞ்சள் மற்றும் அதிமதுர பொடி

அதிமதுர தூளில் உள்ள கிளைசிரைசின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தை பாதிக்கும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கும்.

மஞ்சள் அரிப்பு மற்றும் எரிச்சலூட்டும் சருமத்தை போக்குகிறது. இரண்டையும் கலந்து வெடிப்பு இருக்கும் பகுதிகளில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களை பெற்று கொள்ளுங்கள்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு தூளாக்கி நீரில் கலந்து உங்கள்பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

Recent News