Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsநைஜரில் ஆட்சி கவிழ்ப்பு -அதிரடி காட்டிய நைஜீரியா..!

நைஜரில் ஆட்சி கவிழ்ப்பு -அதிரடி காட்டிய நைஜீரியா..!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவக் கிளா்ச்சி ஏற்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டுக்கான மின் விநியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளது.


இது குறித்து அந்த நாட்டின் மின் விநியோக நிறுவனமான நைஜெலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நைஜருக்கு அதிக அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் மின் தடங்களில் இந்த மாதம் முதல் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நைஜருக்குத் தேவையான 70 சதவீத மின்சாரத்தை நைஜரிடமிருந்துதான் பெறப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து நைஜா் கடந்த 1960-ஆம் ஆண்டு விடுதலை பெர்றதுக்கு பிறகு அந்த நாட்டில் ராணுவ ஆட்சியும், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களின் ஆட்சியும் மாறி மாறி நடைபெற்று வந்தன.


இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முகமது பஸூம் வெற்றி பெற்றாா்.எனினும், அவா் பதவியேற்பதற்கு இரு நாள்களுக்கு முன்னதாக ராணுவத்தின் ஒரு பிரிவினா் கிளா்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனா்.


அதனை முறியடித்த பாதுகாப்புப் படையினா், கிளா்ச்சியாளா்கள் சிலரைக் கைது செய்தனா்.பின்னா் திட்டமிட்டபடி நாட்டின் 10-ஆவது அதிபராக அவா் 2021 ஏப்ரல் 2-ஆம் தேதி பதவியேற்றாா்.


நைஜரில் அமைதியான முறையில் நடைபெற்ற முதல் ஆட்சி மாற்றம் அது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், முகமது பஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக ராணுவத்தின் ஒரு பிரிவினா் வியாழக்கிழமை அறிவித்தனா். மேலும், பஸூமின் பாதுகாவலா்களே அவரை சிறைப்பிடித்தனா்.


இந்த ராணுவக் கிளா்ச்சியை முன்னின்று நடத்திய தளபதி அப்தூரஹ்மேன் சியானி அந்த நாட்டின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டாா்.
இதற்கு, ஐ.நா., ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட அமைப்புகளும் சா்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இந்த விவகாரத்தில் நைஜா் மீது மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக நைஜருக்கான மின் விநியோகத்தை நைஜீரியா தற்போது நிறுத்தியுள்ளது.

Recent News