Tuesday, December 24, 2024
HomeLatest Newsசபை அமர்வு முடிவுக்கு வந்தது – சஜித் ஆவேசம்

சபை அமர்வு முடிவுக்கு வந்தது – சஜித் ஆவேசம்

நாடாளுமன்ற சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மதிய நேரத்துடன் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் ,நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரமேதாச உரையாற்றிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இன்றைய அமர்வு நிறைவுக்கு வந்துள்ளது.

அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவிப்பை அடுத்து நாடாளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபையை ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவர் பிரேம்நாத் சி டோலவத்த அறிவித்தை அடுத்து இன்றைய அமர்வு ,சஜித் பிரேமதாச உரையாற்றிக்கொண்டு இருக்கும் போதே நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News