Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉயிருக்கு ஆபத்தாக மாறும் அழகுசாதன பொருட்கள்! - இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உயிருக்கு ஆபத்தாக மாறும் அழகுசாதன பொருட்கள்! – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் இலங்கை முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வது தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படாமையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதால் தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பொருத்தமற்ற பொருட்கள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யாமல் நாட்டில் தருவிக்கப்படுகின்றன.

இதனை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு தோல் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதால், துறைசார் அதிகாரசபையின் அங்கீகாரம் பெற்றவைகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வது தொடர்பான சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேவையில்லாமல் பல வகையான அழகுசாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தை கழுவினால், சருமத்தின் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Recent News