Saturday, May 18, 2024
HomeLatest Newsஅமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம்! வெளியானது விசேட வர்த்தமானி

அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம்! வெளியானது விசேட வர்த்தமானி

அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பதவி விலகுமாறுகோரி எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் 3 அமைச்சரவைகளை தவிர்த்து ஏனைய அமைச்சர்கள் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் கடந்த 18 ஆம் திகதி புதியஅமைச்சரவையின் பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

இதன்போது 17 அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன் ,அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முதன் முறையாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டனர்.

அத்துடன் அன்றைய தினம் 21 புதிய ராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

எவ்வாறாயினும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும், அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் உரிய முறையில் இதுவரை வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தலைமையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.

Recent News