2019 இறுதி மாதம் தொடக்கம் உலகை புரட்டி போட்ட கொரோனா வைரஸ், சீனாவில் கொஞ்சம் அதிகமாகவே உக்கிர தன்மையை காட்டி வருகிறது. ஏனைய நாடுகள் கொரோனா வைரஸிலிருந்து சற்று தேறி வந்துள்ள நிலையிலும், சீனாவில் இன்னும் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை நிறுத்தவில்லை.
அந்த வகையில் கொவிட்-19 தொற்றின் தொடக்கத்திலிருந்து சீனாவில் பதிவான தினசரி தொற்றாளர் எண்ணிக்கை நேற்று 23ம் திகதி வழமைக்கு மாறாக மிக உயர்ந்த தொகையை பதிவாகியுள்ளது.
இதனால், பொது முடக்கம், வெகுஜன சோதனை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் மூலம் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் சீனாவில் 31,454 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 27,517 பேர் அறிகுறிகள் இல்லாத தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.