Monday, January 27, 2025
HomeLatest Newsயாழில் மீண்டும் கோர தாண்டவமாடும் கொரோனா- ஆபத்தான நிலையில் தொற்றாளர்கள்!

யாழில் மீண்டும் கோர தாண்டவமாடும் கொரோனா- ஆபத்தான நிலையில் தொற்றாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் தங்க வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கும் கொரோனாப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் தங்க வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது.கொரோனாவின் திரிவு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது.

அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றதுடன் அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recent News