Sunday, January 26, 2025
HomeLatest Newsஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்! – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்! – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் தற்போது மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தத் திணைக்களத்தின் தகவலின்படி, புதிதாக 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 64 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலங்களில் ஒற்றை இலக்கங்களிலேயே கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகி வந்தன.

இந்த நிலையில், தற்போது அதில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால், மக்கள் அனைவரையும் 3ஆம் மற்றும் 4ஆம் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்ககொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News