பைஸர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆல்பர்ட் போர்லா (Albert Bourla) இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
60 வயதான இவருக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது நிறுவனத்தின், கொரோனா சிகிச்சைக்கான பெக்ஸ்லோவிட் (Paxlovid) என்ற வாய் வழி உட்கொள்ளும் தடுப்பு மருந்தினை அவர் எடுத்து கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு 2 ஆவது முறையாக கொரோனா தொற்று உறுதி உள்ளது.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது உடல் நிலை நன்றாகவே உள்ளது. அறிகுறிகள் எதுவும் இன்றி காணப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வயோதிப நோயாளிகள் போன்ற, அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு பெக்ஸ்லோவிட் தடுப்பு மருந்து சிகிச்சைக்காக அளிக்கப்படுகிறது.
பைஸர் மற்றும் அதன் ஜெர்மன் நாட்டு பங்குதாரரான பையோஎன்டெக் நிறுவனத்தின் உற்பத்தியான கொரோனா தடுப்பு மருந்தின் 4 தடுப்பூசிகள் போர்லாவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
புதிய வகை பூஸ்டர் தடுப்பூசியை தான் இன்னும் செலுத்திக் கொள்ளவில்லை என போர்லா கூறியுள்ளார்.
அந்த தடுப்பூசி, ஒமைக்ரோனின் பிஏ.5 மற்றும் பிஏ.4 ஆகிய இரு திரிபுகளை முறையே 84.8% மற்றும் 1.8% என்ற அளவில் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் நடுப்பகுதியில் தான் முதல் முறையாக கொவிட் தொற்றிலிருந்து மீண்டதால், மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோய் கடடுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருவதால், தான் இன்னும் புதிய பூஸ்டரைப் பெறவில்லை” என்று போர்லா மேலும் கூறினார்.