Friday, January 24, 2025
HomeLatest Newsதிடீரென உச்சத்தை தொட்ட கொரோனா: சீனாவில் நாளை லாக்டவுன்!

திடீரென உச்சத்தை தொட்ட கொரோனா: சீனாவில் நாளை லாக்டவுன்!

கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய சீன சுகாதாரத் துறையினர் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் நாளை(26) முதல் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த சீனா அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகளும்,ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்தோடு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

அதேவேளை சீனாவின் தலைநகரான  பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 31,444 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செங்சோவின் 8 மாவட்டங்களில் வசிப்பவர்கள் நாளை முதல் 5 நாள்களுக்கு உணவு வாங்கவும்இ மருத்துவச் சிகிச்சைக்கும் வெளியே வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும்.

மேலும் தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்திலிருந்து வடக்கே பெய்ஜிங் வரையிலான வணிகங்கள் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெய்ஜிங்கில் ஒரு கண்காட்சி மையத்தில் கொரோனாவுக்கான மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனை முன்னெடுக்கபடும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News