மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ஆம் திகதி புள்ளி விவரப்படி, இதற்கு முந்தைய வாரத்தை விட 8% நோய் தொற்று அதிகரிப்பு இருந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் ஹான்ஸ் க்ளுக் மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் ஆண்ட்ரியா அம்மோன் ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் அவர்கள் குறிப்பிடும் போது “கடந்த வருடம் அளவுக்கு இல்லை என்றாலும் கொரோனா தொற்று முழுதுமாக முடிவடைந்து விட்டது என கூறமுடியாது. தற்போது ஐரோப்பாவில் திடீரென அதிகரித்து வரும் தொற்று தீவிரத்தை பார்க்கும் போது மீண்டும் ஒரு அலை உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.