Thursday, January 23, 2025
HomeLatest Newsசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா..!வாரத்திற்கு 6.5 கோடி பேர் பாதிப்பு ..!

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா..!
வாரத்திற்கு 6.5 கோடி பேர் பாதிப்பு ..!

சீனாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை மிக வேகமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் இதுவரை 4 கோடி பேர் வரை இத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் யூன் மாதமளவில் அதிகபடாசமாக 6.5 கோடி பேருக்கு இவ் வைரஸால் பாதிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஜீரோ கொவிட் திட்டம் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து அந் நாட்டில் ஏற்படும் மிகப்பெரிய கொரோனா அலை இதுவாகும். இதற்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா தொற்றுத் தாக்கத்தால் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு அதிகமாக தொற்று இனங்காணப்பட்டதில் சுகாதாரத்துறை ஸ்தம்பித்த நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் இப் புதிய XBB திரிபு ஒமிக்ரான் BA.2.75 மற்றும் BJ.1 ஆகியவற்றின் ஹைப்ரிட் வேரியண்ட் ஆகும். இது BA.2.75 வேரியண்டை விட அதி வேகமாகப் பரவுவதோடு நோய் எதிர்ப்புத் திறனை வீரியமாக அழிக்கும் திறனுடையது. இப் புதிய திரிபை கண்டறிய நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக நேரத்தைஎடுத்துக் கொள்வதுடன் உடலில் மிக வேகமாகச் செயற்பட்டு மிக எளிதில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இப் புதிய திரிபின் தாக்கம் சீனாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதனை எதிர்கொள்ள முழு நாடும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recent News