Tuesday, December 24, 2024
HomeLatest Newsசீனாவில் அடங்கமறுக்கும் கொரோனா தொற்று: பொதுமுடக்கங்கள் தொடர்ந்தும் நீடிப்பு!

சீனாவில் அடங்கமறுக்கும் கொரோனா தொற்று: பொதுமுடக்கங்கள் தொடர்ந்தும் நீடிப்பு!

உலகலாவிய ரீதியில் சற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக கொரோனா வைரஸ் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட சீனாவில் மீண்டும் பரவல் அதிகரித்திருப்பது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் தொடரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வ தேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இவ்வாறான நிலையில் சீனாவினைப் பொறுத்தவரையில் கடந்த 3ஆம் திகதி 3,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து குவாங்கு, ஜெங் சூ,மங்கோலியா பகுதி, ஜின்ஜி யாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Recent News