Friday, November 22, 2024
HomeLatest NewsWorld Newsமோடியின் திட்டங்களில் ஏற்பட்ட சர்ச்சை - கண்டனம் தெரிவிக்கும் சீனா…!

மோடியின் திட்டங்களில் ஏற்பட்ட சர்ச்சை – கண்டனம் தெரிவிக்கும் சீனா…!

வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அருணாசலப் பிரதேசத்திற்கு பயணித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.‘வளமான பாரதம், வளமான வடகிழக்கு’ என்ற பெயரில் அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்ததோடு, புதிய திட்டங்களுக்கு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா் பிரதமர் மோடி. அருணாசல பிரதேசத்தில் சுமாா் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட ‘சேலா’ சுரங்கப் பாதையை மக்களின் பயன்பாட்டுக்கு பிரதமா் திறந்துவைத்தாா்.‘சேலா’ சுரங்கப் பாதை, சீன எல்லையையொட்டிய தவாங் பகுதிக்கு அனைத்து காலநிலைகளின்போதும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதோடு, முன்களப் பகுதிகளுக்கு துருப்புகள் மற்றும் ஆயுதங்களின் விரைவான நகா்வுக்கும் பெரிதும் உதவும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், வாகன ஓட்டிகளை மீட்க அவசரகால வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம், பல்வேறு சவால்களுக்கு இடையே 5 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என உரிமை கொண்டாடி வரும் சீனா, இப்பகுதிக்கு ‘ஸாங்னான்’ எனப் பெயர் சூட்டி அழைத்து வருகிறது. அத்துடன், இந்தியத் தலைவர்கள் அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வதற்கு தொடர்ந்து கண்டனத்தை பதிவுசெய்து வருகிறது சீனா.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் இந்தியா, ’அருணாசலப் பிரதேசம்’, நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்திற்கு பயணித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் தூதரக ரீதியிலான எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது சீனா. இந்தியாவின் நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

ஸாங்னான் பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை.இந்தியாவின் நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும். சீனா-இந்தியா எல்லையின் கிழக்குப் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதால் சீனா கடும் அதிருப்தியடைந்துள்ளது, இதை வன்மையாக எதிர்க்கிறது” என்று கூறினார்.

Recent News