Friday, December 27, 2024
HomeLatest Newsகாஷ்மீரைத் தனி நாடாக குறிப்பிட்டதால் சர்ச்சை

காஷ்மீரைத் தனி நாடாக குறிப்பிட்டதால் சர்ச்சை

அண்மையில் பிஹார் மாநிலத்தில், பாடசாலை ஒன்றின் பரீட்ச்சை வினாத்தாளில் காஷ்மீரை தனி நாடாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை நடைபெற்ற இடைத் தவணை பரீட்ச்சைகளின் போது பீகார் கல்வித் திணைக்களம் இந்த பரீட்சை வினாத்தாள்களை தயார் செய்து இருந்தது. இதில் வகுப்பு 7 இற்கு உரிய வினாத்தாள் ஒன்றிலே, பின்வரும் நாடுகளின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் எனும் கேள்வி காணப்பட்டது.

அதில் சீனா, இங்கிலாந்து, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டு இருந்ததோடு காஷ்மீரும் ஒரு நாடாக குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இதனை பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பான வாக்குவாதங்கள் அதிகரித்து வந்த நிலையில், உள்துறை அபிவிருத்தி அமைச்சர் ஷ்ரவன் குமார், இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். 

Recent News