96 வது ஹாலிவுட்டின் ஆஸ்கார் அகாடமி விருதுகள் இடம்பெற்ற சுற்றுப்புறத்தில்
நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி,கோஷமிட்டுள்ளதாகபன்னாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. 96 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் பல நாட்டின் சிறந்த தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள் என கலந்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடங்க முன்பதாக ஆர்பாட்டக்காரர்கள் விழா நடக்கவிருந்த இடத்தை முற்றுகை இட்டனர் .
இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர் . மேலும் சில மணி நேரங்களுக்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது இவைமட்டுமல்லாமல் குறித்த போராட்டக்காரர்கள் பைடனின் தலை துண்டிக்கப்பட்டது போன்று எடுத்துவந்தb உருவச்சிலைகள் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.free பாலஸ்தின் என்ற கோஷங்கள் முழங்கியவாறு இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தது/ இதனையடுத்து பொலிஸாரால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்ட பின்னர் நிகழ்ச்சி நடைபெற்றது .மேலும் குறித்த நிகழ்ச்சியில் பேசிய சிலரும் போர்நிறுத்தம் குறித்து கருத்துதெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .