Tuesday, December 24, 2024
HomeLatest Newsபுகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து! பிரித்தானிய உள்விவகார அமைச்சருக்கு கடும் நெருக்கடி

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து! பிரித்தானிய உள்விவகார அமைச்சருக்கு கடும் நெருக்கடி

அமைச்சர்களுக்கான விதிகளை மீறி நாடாளுமன்ற உறுப்பினரின் ஊழியருக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து அரசாங்க ஆவணத்தை அனுப்பியதற்காக பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில்,கடந்த வாரம் மீண்டும் உள்விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், புகலிடம் கோருவோர் தொடர்பில் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் செயலிழந்து போயுள்ளது எனவும், தற்போது அது கட்டுக்குள் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உண்மையில் அவர்கள் ஆதரவற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் என நம்புவதை நாம் கைவிட வேண்டும் எனவும், பிரித்தானிய மக்களுக்கும் உண்மை நிலை என்ன என்பது தெரியும் என அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

டோவர் பகுதியில் அமைந்துள்ள குடிவரவு மையம் மீது நபரொருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி பின்னர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்தே அமைச்சர் பிரேவர்மேன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இருப்பினும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதுடன், சுயெல்லா பதவியில் இருந்து விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

ஆங்கிலக் கால்வாய் ஊடாக சிறிய படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் படையெடுப்போர் என உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரித்தானியாவில், ரிஷி சுனக்கின் புதிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்படும் நிலையில் தற்போது புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent News