இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே தொடர் தாக்குதல் நடந்து வருகின்ற நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து லெபனானின் ஹிஸ்புல்லா குழு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், லெபனான் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இஸ்ரேலிய நகரங்களான மெட்டுலா மற்றும் ரமோட் நஃப்தாலியில் உள்ள “பல குடியிருப்பு கட்டிடங்களை” ராக்கெட்டுகளால் குறிவைத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தரப்பில், அதன் இராணுவம் ஹெஸ்பொல்லாவிற்கு சொந்தமான இராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளை போர் விமானங்கள், ஹெலிகாப்டர், டாங்கிகள் மற்றும் பீரங்கி குண்டுகளால் தாக்கியதாக X இல் பதிவிட்டு தெரிவித்துள்ளது.
லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், இந்த இஸ்ரேலிய இராணுவ பீரங்கித் தாக்குதல்களில் ஒன்றின் விளைவாக ஐதா அல்-ஷாப் கிராமத்தில் உள்ள ஒரு வீடு எரிந்ததாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.