Wednesday, December 25, 2024
HomeLatest Newsதொடரும் மஸ்க்கின் பயணம்...!ப்ளூடிக் வைத்திருந்தால் அதிஷ்டசாலிகள்...!வரவுள்ள புதிய அப்டேட்...!

தொடரும் மஸ்க்கின் பயணம்…!ப்ளூடிக் வைத்திருந்தால் அதிஷ்டசாலிகள்…!வரவுள்ள புதிய அப்டேட்…!

டுவிட்டரில் ப்ளூடிக் உள்ள பயனர்கள் தம்மை பின் தொடராது இருப்பவர்களிற்கு நேரடியாக செய்திகளை அனுப்பும் வகையிலான புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது தொடக்கம் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றார்.

இந்வருநிலையில், தற்பொழுது ப்ளூடிக் உள்ள பயனர்கள் மட்டுமே தம்மை பின் தொடராது இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப கூடிய வகையிலான ஒரு புதிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு பயனர் தனது DM முழுவதும் ஸ்பேம் செய்திகளாக உள்ளதாகவும், இதுவரை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

அதற்கு உங்கள் டிஎம் ஸ்பேம் வரும் வாரங்களில் கணிசமாகக் குறையும் என்று என்று T(w)itter Daily News என்ற கணக்கு பதிலளித்துள்ளது.

இவ்வாறாக இந்த இரண்டு டுவீட்களுக்கும் பதிலளித்த எலான் மஸ்க், இந்த வாரம் புதுப்பிப்பு வெளியிடப்படும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், தான் பலமுறை கூறியது போன்று AI போட்களை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Recent News