Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsதொடரும் இழப்புக்கள் - பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் திரையுலகம்..!

தொடரும் இழப்புக்கள் – பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்..!

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா தனது 69 ஆவது வயதில் சென்னையில் இன்று (03.05.2023) உடல் நலக்குறைவால் காலமானார்.

கல்லீரல் பிரச்சினை காரணமாக 15 நாட்களாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் , 1982 இல் ஆகாய கங்கை என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் அரண்மனை, துப்பாக்கி , சீமராஜா மற்றும் டான் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மனோபாலாவின் மறைவு சினிமா துறையில் உள்ளவர்களுட அவரது மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News