பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா ஏஜென்சியான unrwa மீதான குற்றசாட்டுகள் பொய்யானது என ஓரளவு நிரூபித்த பின்னர் unrwa நிதி உதவியில் தொடர்ந்து பின்லாந்து ஆதரவளிக்கும் என்று பின்லாந்தின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைச்சர் வில்லே தவியோ கூறினார்.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸின் தாக்குதலில் அதன் ஊழியர்கள் சிலர் பங்கேற்றதாக இஸ்ரேலிய குற்றச்சாட்டுகள் UNRWA மீது திணிக்கப்பட்டது .இந்த குற்றச்சாட்டினை பிரதான காரணமாக கொண்டு பல நாடுகள் unrwa க்கான நிதியுதவிகளை நிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது .
இதன் விளைவாக, பல மேற்கத்திய நாடுகள் ஆரம்பத்தில் ஏஜென்சிக்கு தங்கள் நிதியை இடைநிறுத்தின, ஆனால் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் காஸாவில் மக்கள் படும் அல்லல்கள் காரணமாக மீண்டும் உதவியை தொடர்ந்தன .இந்நிலையில் தற்போது பின்லாந்தும் தற்போது unrwa க்கான நிதியுதவிகளை மீள வழங்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது .