கடந்த 2022ஆம் ஆண்டு கோழி மற்றும் கால்நடைத் தீவனங்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் முட்டை உற்பத்தி 5.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு, இந்த நாட்டில் முட்டை உற்பத்தி 1954 மில்லியன் ஆகும். ஆனால் 2022 ஆம் ஆண்டு இந்த நாட்டில் முட்டை உற்பத்தி 1849 மில்லியனாக குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஒரு முட்டை உற்பத்திக்காக 18.07 ரூபாவும், 2022 ஆம் ஆண்டு ஒரு முட்டை உற்பத்திக்காக செலவிடப்பட்ட தொகை 38.10 ரூபாவாகும் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை அரிசி மற்றும் மக்காச்சோள உற்பத்தியில் கணிசமான குறைவினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் அளவு குறைவடைந்துள்ளதாகவும்,
டொலர் பற்றாக்குறையினால் உணவு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.