Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கையர்களின் கனவுகளை நனவாக்க தொடர்ந்தும் முதலீடு! அமெரிக்கா அறிவிப்பு

இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க தொடர்ந்தும் முதலீடு! அமெரிக்கா அறிவிப்பு

கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைப்பதன் மூலம் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியதுடன், மகிழ்ச்சியான நட்புறவையும் உறுதிப்படுத்தியது.

கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung), இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கை மக்களுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவும் இலங்கையும் நண்பர்கள் என்றும் மதிப்புமிக்க ஜனநாயக நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையர்களுக்கு இது ஒரு சவாலான நேரம் என தெரிவித்த ஜூலி சுங் (Julie Chung), இலங்கையில் உள்ள மக்களுக்காக அமெரிக்கா தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது எனவும் இந்த மையம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இடம் தன்னுடையது அல்ல என்றும் இது உங்கள் இடம் என்றும் தெரிவித்த அவர், இது உங்கள் கனவுகளை அடைய உதவுகிறது என்றும் கூறினார்.

Recent News