Wednesday, January 22, 2025
HomeLatest Newsஜிபி முத்துவை போல் வெளியேற திட்டம் போடும் போட்டியாளர்! பிக்பாஸின் முடிவு என்ன?

ஜிபி முத்துவை போல் வெளியேற திட்டம் போடும் போட்டியாளர்! பிக்பாஸின் முடிவு என்ன?

பிக்பாஸில் ஜிபி முத்துவைப் போன்று வெளியேற நினைக்கும் மற்றுமொரு போட்டியாளர் தொடர்பில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பமானது.ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களை பெற்ற ஜிபி முத்து மனது சரியில்லையென்றும், தன்னை வெளியேற்றும்படியும் பிக் பாஸிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பின்னர் பிக் பாஸால் தனியாக அழைத்து காரணங்கள் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல தடவை கெஞ்சிய காரணத்தால் வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து பிள்ளையை காரணம் காட்டி மகேஷ்வரி வெளியேற திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியது.ஆனால் அவரை வெளியேற்றவில்லை, மாறாக நான்காவது வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் ஐந்தாவது வாரம் அசீமை வெளியேற்ற வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் ஆசைப்பட்டாலும் மக்களின் கணிப்பின் பிரகாரம் நிவாஷினி வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் தலைவர் டாஸ்க்கில் வெற்றிப் பெற்று அசீம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருக்கிறார்.

இவர் தலைவராக பதவிக்கு வந்த போது பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் செய்தார். ஆனால் இது போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை.இதனால் அசீமிடம் அதிக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக அசீம் தற்போது கமரா முன் நின்று “தயவு செய்து வெளியேற்றுமாறு” கேட்டுள்ளார்.

ஆனால் அசீமை வெளியேற்றினால் பிக் பாஸின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து விடும் என்பதால் பிக் பாஸின் முடிவு என்ன என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Recent News