உக்ரைன் நாட்டின் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை படுகொலை செய்யும் ரஷ்யாவின் சதி செயலுக்கு உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டில் உக்ரைன் பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்தவகையில் தெற்கு உக்ரைனின் மைகோலய்வ் பிராந்தியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக அதிபா் ஸெலென்ஸ்கி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அந்தப் பகுதியில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ரஷியா சதித் திட்டம் தீட்டியிருந்தது.
இந்த தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக, அதிபா் ஸெலென்ஸ்கியின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், மைகோலய்வ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவுத் தகவல்களைசி சேகரித்து வந்த அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பான எஸ்பியு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.