Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஅமெரிக்க அதிபருக்கு கொலை சதி -சுட்டுக்கொன்ற பொலிஸார்..!

அமெரிக்க அதிபருக்கு கொலை சதி -சுட்டுக்கொன்ற பொலிஸார்..!

அமெரிக்காவின் மேற்கில் உள்ள உடா மாநிலத்தில்அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் புலனாய்வு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


உடா மாநிலத்தை சேர்ந்த தீவிர ட்ரம்ப் விசுவாசியான க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பவர் முகநூலில் பைடன் குறித்து தீவிரமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.


இரு தினங்களுக்கு முன், தனது முகநூல் பதிவில் அதிபர் பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் வேளை வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து உடா மாநிலத்தில் உள்ள ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது வாரண்டுடன் சென்ற அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகளால் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

Recent News