Tuesday, December 24, 2024
HomeLatest Newsகூட்டணி கட்சிக்குள் குழப்பம்..!நெதர்லாந்து பிரதமர் திடீர் பதவி விலகல்…!

கூட்டணி கட்சிக்குள் குழப்பம்..!நெதர்லாந்து பிரதமர் திடீர் பதவி விலகல்…!

நெதர்லாந்து நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அந்த நாட்டில், கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதுடன், இந்த கூட்டணி அரசில் மார்க் ரூட் பிரதமராக செயலாற்றி வருகின்றார்.

இவ்வாறான சூழலில், புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது குறித்து கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

அத்துடன், அந்த மசோதா விடயத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்தமையால் பிரதமர் பதவியை மார்க் ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, மார்க், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News