Saturday, January 25, 2025
HomeLatest Newsரொனால்டோவிற்கு ஏற்பட்ட குழப்பம்

ரொனால்டோவிற்கு ஏற்பட்ட குழப்பம்

செய்தியாளர் கூட்டத்தில் சவூதி அரேபியாவுக்குப் பதிலாக தென்னாபிரிக்கா என்று கூறிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வீடியோ சமூகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

“தென்னாபிரிக்காவுக்கு வந்ததால் எமது கால்பந்துப் பயணம் முடிந்து விடவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று (ஜனவரி 3) சவூதி அரேபியாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தவறுதலாகக் கூறியதை எவரும் திருத்தவில்லை. அனைவரும் அதற்குப் பதிலாக அவருக்குப் பலத்த வரவேற்பை அளித்துள்ளனர்.

ஆனால் சமூகத் தளங்களில் பலர் அவரைத் திருத்தியதோடு கேலியும் செய்தனர். அவர்களில் ஒருவர், “உங்களுக்கு 200 மில்லியன் யூரோ சம்பளம் கிடைக்கவிருக்கிறது. ஆனால் நாட்டின் பெயர்உங்களுக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. பரவாயில்லை, தென்னாபிரிக்காவுக்கு வருக வருக என வரவேற்கிறோம்,” என்று ட்விட்டரில் தெரிவித்தார்.

அண்மையில் ரொனால்டோ 200 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையில் சவூதியின் அல் நாசிர் அணியுடன் இணைந்தார்.

Recent News